என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமர் ஜவான் ஜோதி
நீங்கள் தேடியது "அமர் ஜவான் ஜோதி"
குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். #RepublicDay #AmarJawanJyoti
புதுடெல்லி:
அதேசமயம், குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தனர். அவர்களை விழா அரங்கில் பிரதமர் மோடி வரவேற்று அழைத்துச் செல்கிறார்.
அதன்பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்திய ராணுவத்தின் பெருமைமிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. #RepublicDay #AmarJawanJyoti
நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் போர் வீரர்கள் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து, உயிர்நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு மோடி புறப்பட்டார்.
அதேசமயம், குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தனர். அவர்களை விழா அரங்கில் பிரதமர் மோடி வரவேற்று அழைத்துச் செல்கிறார்.
அதன்பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்திய ராணுவத்தின் பெருமைமிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. #RepublicDay #AmarJawanJyoti
×

X